கவிதைகள் இதழில்

பூவை அணுகும் வண்டு பூவின் இசையைக் கேட்கலாம். பிரதீப் கென்னடியின் இந்த கவிதையில் பூத்த மலர் இசையைக் கேட்கிறது. 'பூத்த மலர் கேட்பது இசை' என்ற வரியை ஒரு கவிஞன் பித்து நிலையில் மட்டுமே எழுத முடியும். பித்து நிலை கவிதையை அணுகும் கருவி. பூத்த பித்து கேட்பதும் கவிதையைத் தான்.  பூத்த மலர் கேட்பது இசை - மதார் கவிதைகள் இதழ்

Frames Per Life

இந்த புகைப்படங்கள் ஒவ்வொன்றும் வெவ்வேறு தருணங்களில் நான் எடுத்தவை. ஃபோன்கள் மாரியபடி இருந்ததில் பல புகைப்படங்களை தொலைத்தும்விட்டேன். கல்லூரியில்தான் கேமராவில் புகைப்படம் எடுக்க கற்றுக்கொண்டேன். ஒரே நாளில் நான் எடுத்த 800 புகைப்படங்கள் அப்பொழுது நண்பர்களுக்கு மத்தியில் உளவிய ஒரு நகைச்சுவை. லேப்டாப்பில் "Pradeep 800" என்ற ஃபோல்டரில் அதை பதிவேற்றி இருந்தார்கள். அது மிகை என்றே அதன்பின்தான் எனக்கு தெரியும். இப்பொழுது ஏனோ சில தினங்களாக மீண்டும் நானே ஒரு கேமரா வாங்கி முறையாக புகைப்படங்கள்… Continue reading Frames Per Life

இனிக்கிறது

இனிக்கிறதுவெறும் காற்றுக்குஇத்தனை இனிப்பாவிளக்கில் வந்து விழுந்துகுளிர்காய்ந்திறக்கிறது இரவில் வண்டுஎன் உடம்பை நா நீட்டிசுவைக்கிறது காற்றுஇசையில் விழுந்த சொல்லில்விழுந்தது இசைநதி நீராட அழைத்ததைஅனைவருமே உணர்ந்தோம்வானத்து நட்சத்திரங்கள்வந்தமர்ந்த அவையில்உன் நடனம்பசும் கம்பளத்தை விரித்துசுழன்று சுழன்றுசுத்தி சுத்திசுழல் என்றாகிசட்டென அமர்ந்து மறைந்தாய்நீ பரிசளித்தஇனிப்பு பெட்டகத்தில்பாதி பிட்டு நான் உண்கிறேன்மீதியை இந்தா நீயும் கொஞ்சம் உண்ணு **

வியக்க பழகிய நாள்

பகவத் கீதை| சாங்கிய யோகம்| பாடல் 29 இந்த ஆத்மாவை"வியப்பென ஒருவன் காண்கிறான்வியப்பென ஒருவன் சொல்கிறான்வியப்பென ஒருவன் கேட்கிறான்கேட்கினும், இதனை அறிவான் எவனுமிலன்" ** ஒரு காப்பியை குடித்துவிட்டு வந்து இதை எழுத துவங்குகிறேன். எதையாவது எழுத வேண்டும் என்ற மனநிலை நான் முதன் முதலில் டார்வின் என்ற சொல்லை எப்படி கேட்டேன் என்பதை குறித்ததுதான் இது. நான் நான்காவது படித்த போது நான் படித்த கிருஸ்த்துவ பள்ளியில் நண்பர்கள் மத்தியில் “கடவுள் இல்லை” என்பதை அறிவித்தேன்.… Continue reading வியக்க பழகிய நாள்

ஒவ்வொரு சொல்லும் ஒரு சொல்

துளி நீந்தும் ஆறுகோடி நூறு கொய்ய முடியா மலர்சத்தம் இசைத்த ஆழம்சிறகு எழுந்த இறகுசாலை நிறைத்த மாலைஓலம் தொட்ட சொல்காடு கண்ட கண்ணின் சூதுஅலை உடைய காமம்கடலின் தாபம்பச்சை எரியும் மலைமுத்தம் மலர்ந்த பூஅம்மை இருள் அப்பன் ஒளி ***

அமரும் வானம்

கூண்டுகளை திறந்தபின்னும்பறக்காத பறவைக்குவேண்டிய விடுதலை எதுஅல்லது அது பட்ட சிறை எதுவானம் அத்தனை சிறியதாவந்தமற்ந்தால் உடையும் கிளையா உயர்ந்த மரத்தில்உச்சி கிளையில்தொடுவான் நிலைகுத்தியவிழி கொண்ட பறவையேவானம் முடிவதில்லைசிறகுகள் முறியும் வரைநீ நிலம் என நம்பியவயல் வெளிகளில்நாற்றுக்கு ஒன்றெனகரிக்கு நட்ட கன்னிகள்மலைமுடிகள் முனிகளை போலஉச்சிகிளைகள் விட்டெழுந்த பறவைகளின் நினைவுகளை வெளிகாட்டுவத்தில்லைகிளைகளும் உனக்கானதே இல்லை ***

புள்ளி இட்ட கோலம்

இரவில் என் நெஞ்சின்முடிகளை கோதி பார்த்துசிலவற்றை புடுங்கிப்பார்த்துதிரும்பி படுத்த மகள்வானத்து நட்சத்திரங்களைபுள்ளிகளாக பாவித்துகோலமிட்டு முடிக்க முயன்றுமுடியுமுன்னே மீண்டும்என் மாரின் மயிர்களுக்கு திரும்பினாள் அவள் வரைந்தஅந்தரத்து கோலத்தைநான் தொடர்ந்தேன்அம்மாவைபோலவேஇறைவனின் புள்ளிகள் அழகானவைஅவளைபோலவேஇறைவனின் கோலநோட்டு முடிவதில்லைஅவனுடைய ஒரு வாசல்தான்இங்கே ஒரு வெளிஒரு வாசலின் கோலமும்இன்னொரு வாசலின் கோலமும்ஒரு கோலத்தின் இரு புள்ளிகள்மகாகோலம்மகாபுள்ளிகள்மகாஅரிசிமகாஎரும்புமகாஅம்மாமகாஇரவுமகாமாரும் சிறியமகளும் **

நதியின் கரையில் தாகம் தீரவில்லை

நதியின் கரையில்வாழும் புற்களுக்குதாகம் தீரவில்லைபூக்களுக்கு சுகந்தமும்பறவைகளுக்கு பறப்பதும்போதவில்லைமுறுகி திருகும் வெல்லம்பாகாகி தேனாகிபின்னும் போதவில்லைஒவ்வொன்றும் உருகி உருகி பார்த்தும்உண்டு போதவில்லைகரைந்து மீளவில்லைதவிப்பு ஓயவில்லை புற்கள் நதியில்மலர் மணத்தில்பறவை வானில்கருவி இசையில்வெல்லம் தேனில்தேன் தீயில்தீ ஒளியில்ஒளி ஒளியில்அவை அவியில்அவி அதுவில்கலக்கும் விடாய் தீரவில்லை **

இடை விட்டும் விடாத இரு ஆடல்

*** காற்றின் நிலத்தில்உந்தி தத்திஒன்றென பறக்கும்ஜோடி பட்டாம்பூச்சிகள் ஒன்றின் நடனத்தைமற்றொன்று தொடர்கிறதுசட்டென்று இரண்டாமதைநடிக்கிறது முதலாமவது இனைய முயலும்இரண்டு இசைகருவிகள் அவைஇனைய முடியாததன்சூட்சமம் இசை ஆடிமுன் அமர்ந்துமுடியாது ஆடும்ஆடல் அவை ** தீர்ந்து விட போகும்ஒளியை நா நீட்டிகொண்டாடி பருகுகிறதுஅந்தி பறவைகள்கடைசியாக ஆற்றில் ஒருமுக்கு போட்டுகரையேருவது போலபறந்து பார்த்துக்கொள்கிறது மீண்டும் பகல்வரலாம் வராமலும் போகலாம் புத்தம் புதிதாகபிறந்து வரும் பகலைஅறிவித்து கூறுகிறதுகாலை பறவைகள் மீண்டும் இரவுவராமல் போகலாம் ***

அழகின் எடை

இயற்கையில் இத்தனைபெருமரங்களுக்கும் கடும்மரங்களுக்கும்மத்தியில் இந்த கொடிவகைகள்பிழைத்திருந்தது எப்படி ?வலியவை வாழும் நியதியில்கொடிகள் எப்படி ? செடி இனத்தில்கொடி அல்லவா அழகுமான் மயக்கும் விழிகள்மலர் இனிக்கும் கனிகள் மென்மைக்கும் அழகுக்கும்இருக்கும் தொடர்பு என்ன?அதற்க்கும் அன்புக்கும்?மென்மைக்கும் பெண்மைக்கும்?இயற்கைக்கும் அதற்க்கும்? முழுமரம் ஒன்றின் மேல்முழுவதும் பரவிஅதை உண்டு திங்கும்கொடிவகை ஒன்றை பார்த்தேன் திசைகள் அற்றது காடு.